1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jasaon sanjay talk about his breakup

லவ் பண்ணேன்!.. பிரேக்அப் ஆயிடுச்சி!.. ஜேசன் சஞ்சய் சொன்ன பிளாஷ்பேக்!...

jason sanjay
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். ஜேசன் சிறுவனாக இருந்தபோது விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருந்தார்.

எனவே அப்பாவை போலவே அவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரும் இயக்கத்தில்தான் எனக்கு ஆசை எனக்கூறி சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியிருக்கிறது.

அந்த திரைப்படம் நேற்று வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே சினிமா படம் தொடர்பான புரமோஷன்களில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டு வருகிறார்...

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய் ‘காலேஜில் படிக்கும் போது நானும் லவ் பண்ணேன். மொத்தமா ஒன்றரை வருஷம் அந்த உறவில் இருந்தேன். அதன்பின் இரண்டு பேரும் சுமூகமாக பேசி பிரிந்துவிட்டோம்.. அந்த சமயத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்கள்தான் கேட்டிருப்பேன்.. அதற்கு பிறகு வாழ்க்கையை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன்’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாங்க பக்கத்துல இருந்தப்போ ஸ்டாலின் இப்படி பேசல!.. கண்டிக்கிறோம்!. வீரபாண்டியன் பேட்டி...