1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk anand asking mlas to wait patience

10 கோடி கொடுத்தாலும் மனசாட்சியோடு இருங்க!.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு என்.ஆனந்த் கோரிக்கை...

vijay
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமா? இல்லையா? என்பதுதான் தற்போது எல்லோர் மனதிலும் ஓடும் கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனெனில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

இதில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்திருக்கிறது. அப்படி பார்த்தாலும் தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தை மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டிருக்கிறார்.. அவர்கள் இது தொடர்பாக ஆலோசித்து அநேகமாக இன்று இரவு அல்லது நாளை காலை சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் மற்ற கட்சி பக்கம் சென்று விடக்கூடாது என தவெகவும்  அவர்களை பத்திரமாக பாதுகாத்து வருகிறது..

இந்நிலையில், தவெக எம்எல்ஏக்கள் முன்பு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ‘விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் நம்முடன் இணைவார்கள்.. எதையும் நினைத்து புலம்ப வேண்டாம்.. உறுதியாக இருங்கள்.. 10 கோடி ரூபாயை உங்கள் முன்பு வைத்தால் கூட தலைவர் தளபதி புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.. நல்லதே நடக்கும்’ என அறிவுறுத்தியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்திருப்பதை அரசியல் ஒழுக்கக்கேடு: மணிசங்கர் அய்யர்