ஒருவேளையும் நடக்கல!. சட்டு புட்டுன்னு விஜயை சி.எம் ஆக்குங்க!.. மன்சூர் அலிகான் கோபம்....
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் மன்சூர் அலிகான். அதன்பின் பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். கடந்த பல வருடங்களாகவே காமெடி கலந்த வில்லனாக கலக்கி வருகிறார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமும் உண்டு..
சினிமா நடிகர் என்றாலும் தொடர்ந்து சமூகம் சார்ந்த கருத்துகளையும் பேசி வருகிறார் மன்சூர் அலிகான். தனியாக கட்சியெல்லாம் துவங்கி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.. ஆனால் அவருக்கு போதுமான வாக்குகள் கிடைப்பதில்லை.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை..
இந்நிலையில்தான், தற்போது ஒரு வீடியோவில் பேசியுள்ள மன்சூரலிகான் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.. உடனே அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.. பாஜக எல்லா மாநிலங்களிலும் இதைத்தான் செய்கிறது.. இது கண்டிக்கத்தக்கது.. தமிழ்நாட்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. விஜயை முதல்வராக அறிவிக்க வேண்டும்.. அவர் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பார்.. விநாயகருக்கு 108 தேங்காய் உடைப்பது போல விஜய்க்கு 108 தொகுதிகளை மக்கள் கொடுத்துள்ளனர். அதை வேறொரு 108ஆக மாற்றி விடாதீர்கள் என அவர் பேசியிருக்கிறார்..