இது வேலைக்கு ஆவாது!. அடுத்த பிளான் அதுதன்!.. விஜய் எடுத்த முடிவு?...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 தொகுதிகள் கிடைத்திருந்தும் விஜயால் ஆட்சி அமைக்க முடியவ்வில்லை. ஏனெனில் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்தும் கூட மேலும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படுகிறது.
எனவே விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் வாட்ஸ்-அப்பில் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஒருபக்கம் 117 எம்எல்ஏக்களின் ஆதரவோடு வந்தால் மட்டுமே உங்களை ஆட்சியமைக்க அழைப்பேன் என ஆளுநர் கறாராக சொல்லிவிட்டார்.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது.. பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.. விஜய் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கட்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் வழக்கம் போல் விஜய் அமைதியாக இருக்கிறார்..
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட தவெக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. ராகுல் காந்தியை பரிந்துரைத்த வழக்கறிஞர்கள் ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. சட்ட விதிகளின்படி பதவிப் பிராமாணம் செய்து வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட அவகாசம் வழங்குமாறு வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனராம்.
ஆனால் உச்ச நீதிமன்றம் சென்றாலும் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. எனவே இந்த இரவுகள் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து உச்சநீதிமன்றத்தை அணுகுவதா? வேண்டாமா? என விஜய் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.. சட்ட ஆலோசகர்களிடம் இதுபற்றி விஜய் ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.