1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn formers association declare protest

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

vijay
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக மாறியுள்ளார். தவெக ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தது.

ஒருபக்கம், தவெக சொன்னபடி தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே எல்லோருக்கும் 200 யூனிட் இலவசம் என வாக்குறுதி அளித்துவிட்டு 500 யூனிட்டுக்கு கீழே பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தமிழக அரசு அறிவித்தது.

அதேபோல், விவசாய கடன் தள்ளுபடி தொடப்ராக தவெக கொடுத்த வாக்குறுதியும் தற்போது பொதுமக்களிடம் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்திருப்பவர்களுக்கு மொத்த கடனும் தள்ளுபடி 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகள் வாங்கிய கடனில் 50 சதவீதம் கடன் தள்ளுபடி என கூறப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று வெளியான குறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வரையிலான கடன் மட்டுமே முழு தள்ளுபடி என தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும் சிறு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி என கூறப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக விவசாயிகள் தவெக அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ’தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. ஜூன் 1 முதல் தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. விவசாயிகளுக்கு பயனளிக்காத இந்த திட்டத்தை ரத்து செய்து வாக்குறுதி அளித்தபடி சிறு குரு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.