தொடர்புடைய செய்திகள்
- ஒருவேளையும் நடக்கல!. சட்டு புட்டுன்னு விஜயை சி.எம் ஆக்குங்க!.. மன்சூர் அலிகான் கோபம்....
- இது வேலைக்கு ஆவாது!. அடுத்த பிளான் அதுதன்!.. விஜய் எடுத்த முடிவு?...
- வாட்ஸ் ஆப்லதான் அனுப்புவாரா?. விஜய் நேர்ல வராமாட்டாரா?.. விசிக பொதுச்செயலாளர் கோபம்!....
- நான் அந்த முடிவெடுத்தா நீங்க கட்டுப்படணும்!.. எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் வாங்கிய கையெழுத்து!...
- நேரா முதல்வர்தானா?.. இந்த எதிர்கட்சி தலைவர்லாம் வேண்டாமா?!. விஜய் செய்வது சரியா?...
10ம் தேதி வரை விஜய்க்கு டைம்!.. இல்லனா நாங்க முடிவு பண்ணுவோம்!.. திமுக தகவல்!...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சியை 108 தொகுதிகளில் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் தவெகவிடம் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் தவெகவின் பலம் 112 க உயர்ந்திருக்கிறது, ஆனாலும், இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் இருந்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும்
இந்த காரணத்தைக் காட்டி தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. நீங்கள் என்னை முதல்வராக நியமனம் செய்து வையுங்கள்.. நான் சட்டசபையில் என் பலத்தை நிரூபிக்கிறேன் என விஜய் வைத்த கோரிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை. அது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்.. எனவே ஆதரவு தேவையான எம்.எல்.ஏக்களின் கடிதத்தோடு என்னை வந்து சந்தியுங்கள் என அவர் கூறியிருக்கிறார்..
இதையடுத்து விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டிருக்கிறார்.. அவர்கள் இன்று இரவுக்குள் தங்கள் முடிவை சொல்வார்கள் என தெரிகிறது. ஒருபக்கம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப் போவதாக பலரும் செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள். இது நடக்குமா என்பது தெரியவில்லை..
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் விஜய்க்கு ஆளுநர் 10ம் தேதி வரை கெடு கொடுத்திருக்கிறார்.. அதுவரை நாங்கள் பொறுத்திருப்போம்.. விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று திமுக முடிவு செய்யும் எனக் கூறியிருக்கிறார்.