1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. communist parties givien their support to vijay

தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு!.. ஆட்சி அமைப்பாரா விஜய்?...

vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியமைக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என சொல்லப்படுகிறது. எனவே, ஆட்சியமைக்க தவெகவுக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. இதே காரணமாக காட்டி தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை..

எனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டிருந்தார். அதில் நேற்று காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துவிட்டது. எனவே தவெகவின் பலம் 12ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறது.

எனவே தற்போது தவெகவின் பலன் 116ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. அனேகமாக விசிக கட்சி ஆதரவு கொடுத்து விட்டால் விஜய் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்கமுடியாது.
அடுத்த கட்டுரையில்
10 கோடி கொடுத்தாலும் மனசாட்சியோடு இருங்க!.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு என்.ஆனந்த் கோரிக்கை...