சென்னை முழுவதும் அதிரடி ரெய்டு!.. கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்!...
தமிழகத்தில் கடந்த பல வருடங்களாகவே கஞ்சா மற்றும் போதை மாத்திரை போன்ற போதை மருந்துகள் புழக்கத்தில் இருந்தாலும் கடந்த 2021ம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்தபின் இது மிகவும் அதிகரித்தது. சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள திருவள்ளூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக பள்ளி மற்றும் இளைஞர்களிடம் போதைப்பொருளை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்தது.
இதனால், தமிழகமெங்கும் குற்றச்செயல்களும் அதிகரித்தது. ஒரு வட மாநில வாலிபரை சில இளைஞர்கள் அரிவாளால் வெட்டிய வீடியோவும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் 11வது படித்து வந்த சிறுமியை கொடூரமாக ஒருவன் கொலை செய்த சம்பவத்திற்கு பின்னணியிலும் கஞ்சா போதை இருந்தது.
தவெக தலைவர் விஜய் மேடைகளில் பேசியபோது திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதே இதற்கு காரணம் என்று பேசினார். அதோடு, அவர் முதலமைச்சரானவுடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சென்னை முழுவதும் இன்று காலை ரெய்டு நடத்தப்பட்டது.. சென்னை முழுவதும் இன்று காலை முதல் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். போதைப்பொருட்களுக்கு எதிராக Special Drive நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.