1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. all officers should come to office before ten

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

vijay
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். அரசியலில் இப்படி ஒரு மாற்றம் வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல வருடங்களாக அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தநிலையில் திராவிடம் இல்லாத ஒரு கட்சி அரசியலுக்கு வந்திருப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றதோடு புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது..

ஒருபக்கம் முதல்வராக பதவியேற்றது முதலே விஜய் அரசு அலுவலர் போல தினமும் காலை 10 மணிக்குள் தலைமைச் செயலகம் சென்று விடுகிறார். மதிய உணவை கூடவே கொண்டு வந்து அங்கேயே சாப்பிடுகிறார். சாயந்திரம் 4 மணி அளவில் அவர் வீட்டுக்கு கிளம்பி செல்கிறார். இதுவரைக்கும் எந்த முதல்வரும் இப்படி ஒரு அரசு ஊழியர் போல இவ்வளவு நேரம் தலைமைச் செயலகத்தில் இருந்ததில்லை என தலைமை சில அதிகாரிகளே கூறுகிறார்கள்..

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் சரியாக காலை 10 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என துறைவாரியாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட ஏற்பட்ட குறைகளை 5500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். முதல்வர் விஜய் காலை 9:30 மணியிலிருந்து 10 மணிக்குள் தலைமை செயலகம் வந்து விடுவதால் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வருவது அவசியம் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அவலமான நிலையில் அம்மா உணவகம்.. லெப்ட் ரைட் வாங்கிய டிவிகே எம்.எல்.ஏ ரமேஷ்..!