தொடர்புடைய செய்திகள்
- விஜய் சாருக்கு தெரிஞ்சிதான் வீடியோ எடுத்தேன்!.. வைரல் வீடியோ குறித்து அதிகாரி விளக்கம்..
- முதன் முறையா இப்படி ஒரு தலைவரை பார்க்கிறேன்!.. விஜயை புகழ்ந்து தள்ளிய சுகாசினி!...
- விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்!.. தவெக அழைப்பு!..
- மின்சார வாரியத்தில் 2.5 லட்சம் கோடி கடன்!.. பல முறைகேடுகள்!. சி.டி.நிர்மல் குமார் பேட்டி..
- கிறிஸ்துவ ஓட்டு வேணும்னா ஜோசப் விஜய்!.. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு..
பாட்டிலுக்கு 10 ரூபா!.. விஜய் போட்ட ஆர்டர்!.. உண்மை வெளியே வருமா?..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைந்து அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக அமர்ந்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் பல அதிரடி அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
விஜய் முதல்வராக பதவியேற்ற கடந்த 9 நாட்களிலேயே பல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் என அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. அதேநேரம் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குவது, 10 மணிக்கு மேல் பிளாக்கில் மதுபானங்களை விற்பது தொடர்ந்து வருகிறது. இதையெல்லாம் முந்தைய திமுக அரசு கண்டு கொள்ளவில்லை..
ஆனால் முதலமைச்சர் விஜயோ இதை சீரியசாக எடுத்துக்கொண்டு டாஸ்மாக் தொடர்பான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது. 10 மணிக்கு மேல் மதுபான பாட்டில்களை விற்றால் கடும் நடவடிக்கை என்றெல்லாம் காவல்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதேபோல் பாட்டிலுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்கக் கூடாது எனவும் தமிழக காவல்துறையை எச்சரித்திருக்கிறது. ஆனாலும் பல டாஸ்மாக் கடைகளில் இன்னும் ஒரு பாட்டிலுக்கு 10 அல்லது 5 ரூபாய் சேர்த்து வாங்கி வருகிறார்கள் என குடிமகன்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என கண்காணித்து அறிக்கை கொடுக்குமாறு நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. போலீசாரின் சோதனை சென்னையில் துவங்கப்பட்டாலும் படிப்படியாக தமிழக முழுவதும் இந்த சோதனை நடைபெறும் என தெரிகிறது..