1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RBI Tightens Mobile Wallet Norms; Imposes Strict Limits on Balances and P2P Transfers

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், மொபைல் வாலட்டுகள் எனப்படும் முன்கூட்டே பணம் செலுத்தி பயன்படுத்தும் கட்டண கருவிகளுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி திடீரென கடுமையாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கை Fintech துறையினரை முற்றிலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த புதிய உத்தரவின்படி, மொபைல் வாலட் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களான Mobikwik, PhonePe, Amazon Pay, Pine Labs மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் சில கடுமையான புதிய கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதன்படி, இனி ஒரு மொபைல் வாலட்டில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கக்கூடிய மாதாந்திர அதிகபட்ச இருப்புத் தொகை  2 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்களுக்கு இடையேயான  பணப்பரிமாற்றங்களுக்கான மாதாந்திர வரம்பு 25,000 ரூபாயாகவும், வாலட்டில் ரொக்கமாகப் பணம் ஏற்றுவதற்கான மாதாந்திர வரம்பு 10,000 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
 
இணையவழி சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை தடுக்கும் நோக்கிலேயே ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனினும், இந்த வரம்புகள் வாலட் நிறுவனங்களின் லாபத்தையும், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டையும் வெகுவாக பாதிக்கும் என்று இந்த துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!