1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress suhasini praise chief minister vijay

முதன் முறையா இப்படி ஒரு தலைவரை பார்க்கிறேன்!.. விஜயை புகழ்ந்து தள்ளிய சுகாசினி!...

vijay suhasini
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருப்பவர் விஜய். இவரின் தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது. 108 தொகுதிகலில் வெற்றி பெற்ற தவெக கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைத்திருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே எதிர்க்கட்சிகளை திட்டுவார்கள், கடுமையாக விமர்சனம் செய்வார்கள், திட்டுவதுதான் அரசியல் என்கிற கொள்கை, திட்டுவதுதான் அரசியல் எனவும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். கடந்த 60 வருடங்களுக்கும் மேல் மக்கள் பார்த்த அரசியல் இது மட்டும்தான். குறிப்பாக முழுக்க முழுக்க வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி அரசிலைத்தான் தமிழக மக்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தது முதலில் யாரைப் பற்றியும் தரக்குறைவாக அவர் பேசுவதில்லை.. திமுகவை மட்டுமே அவர் விமர்சித்தார். அதுவும் அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் மட்டுமே விமர்சித்தார்.  தற்போது அவர் முதலமைச்சராகிவிட்ட நிலையில் நடிகை, இயக்குனர் மற்றும் மணிரத்தினத்தின் மனைவியுமான சுகாசினி விழா ஒன்றில் பேசிய போது விஜயை பாராட்டி பேசியிருக்கிறார்..

முதல் முதலாக ஒரு காழ்ப்புணர்ச்சி இல்லாத ஒரு தலைவரை பார்க்கிறேன். விஜய் யாரைப் பற்றியும் பேசுவதில்லை.. யாரையும் திட்டுவதில்லை.. அவதூறு பேசுவதும், திட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வதும்தான் இதற்கு முன் நான் பார்த்த அரசியல். ஆனால் விஜய் வேறு மாதிரி இருக்கிறார்.. அவர் தன் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.. னிவரும் இளைஞர்களும் இதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இனி வரும் அரசியல் தலைவர்களும் விஜயிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புதிய மாற்றத்தை விஜய் உருவாக்கியிருக்கிறார். திட்டுவது மட்டும்தான் அரசியல் என இருக்கும் நிலையில் விஜய் ஒரு புதிய அரசியல் முன்னெடுப்பை கொண்டு வந்திருக்கிறார்.. இது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.. நாம் நல்லவர்.. அதற்காக கெட்டவர்களை திட்ட வேண்டாம்.. கெட்டவர்கள் அவர்களாக திருந்துவார்கள்’ என அவர் நினைக்கிறார்’ என சுகாசினி பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
கரூரில் 19 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!.. முதல்வர் விஜய் அதிரடி...