1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Power Shutdown in Key Areas of Chennai Today Due to Essential Maintenance Work

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை மின்தடை
சென்னையின் முக்கிய பகுதிகளில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் மாதாந்திர மின் வாரிய பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று  செவ்வாய்க்கிழமை) அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னையின் சில முக்கிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகள்:
 
தி.நகர்: பஜுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, பாரதி தெரு.
 
சாலிகிராமம்: குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை.
 
விருகம்பாக்கம்: ஆற்காடு சாலை, என்.எஸ்.கே. லேன், ஷியாமளா டவர்.
 
சின்மயா நகர்: முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, காமராஜர் சாலை.
 
கே.கே. நகர் மற்றும் தசரதபுரம்: பரணி காலனி, சூரியா தெரு, 80 அடி சாலை, காவேரி ரங்கன் நகர், லோகையா காலனி.
 
திருவேற்காடு & ஐயப்பன்தாங்கல்: ஆனந்தன் நகர், மகாலட்சுமி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஜெ.ஜெ நகர், சாய் நகர்.
 
மதியம் 2:00 மணிக்குள் திட்டமிட்டபடி பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், இந்தப் பகுதிகளில் மீண்டும் தடையின்றி மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை இந்த நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?