தொடர்புடைய செய்திகள்
- தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறுமா?!.. திருமா ரியாக்ஷன் என்ன?...
- ஒன்னும் மாறல!. நடப்பது திமுக ஆட்சியா?.. இல்லை தவெக ஆட்சியா?!.. சீமான் பொங்கிட்டாரே...
- முதன் முறையா இப்படி ஒரு தலைவரை பார்க்கிறேன்!.. விஜயை புகழ்ந்து தள்ளிய சுகாசினி!...
- விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்!.. தவெக அழைப்பு!..
- மின்சார வாரியத்தில் 2.5 லட்சம் கோடி கடன்!.. பல முறைகேடுகள்!. சி.டி.நிர்மல் குமார் பேட்டி..
விஜய் சாருக்கு தெரிஞ்சிதான் வீடியோ எடுத்தேன்!.. வைரல் வீடியோ குறித்து அதிகாரி விளக்கம்..
தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றது முதலே ஒரு அரசு அலுவலர் போல தினமும் காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் தலைமைச் செயலகம் வந்து முதல்வர் பணியை பார்க்க தொடங்க விடுகிறார். அதோடு தினமும் பல்வேறு துறையைச் சார்ந்த பலரையும் சந்திக்கிறார். பல சங்கங்களின் தலைவர்கள், இயக்கங்கள், தொழில் அதிபர்கள், முதலீட்டார்கள் என்ற பலரையும் சந்திக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது..
இந்நிலையில்தான், சமீபத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் பெண் அதிகாரி ஒருவர் முதல்வர் விஜயிடம் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் அமைந்திருந்த ஒரு அதிகாரி செல்ஃபி வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஒரு முதலமைச்சர் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படி ஒருவரால் வீடியோ எடுக்க முடிகிறது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்?.. இது பாதுகாப்பு குறைபாடு என்றெல்லாம் பலரும் பதிவிட்டனர்.
இந்நிலையில்தான் இந்த வீடியோவை எடுத்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகி சிம்மச்சந்திரன் இது பற்றி விளக்கமளித்துள்ளார். 35 வருடங்களில் பலமுறை முதலமைச்சர்களை சந்தித்துள்ளோம். அலுவலகத்தில் இருப்பார்கள் என்பதால் பயந்து பேசுவோம். நீங்கள் ஒருவர்தான் எங்களை தனியாக அழைத்து பேசுகிறீர்கள் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் சிரித்தார். முதல்வர் அலுவலகத்தில் யாரும் எங்களை ஏன் வீடியோ எடுத்தீர்கள் என்று கேட்கவில்லை. முதல்வருக்கு தெரிந்துதான் நான் வீடியோ எடுத்தேன். அவர் அதை தடுக்கவில்லை.. அது குறித்து கேட்கவும் இல்லை.. செய்தி தொடர்பு அதிகாரிகள் மட்டுமே ஏன் வீடியோ எடுத்தீர்கள்? என கேட்டனர்.