1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reporter savukku shankar blame arun ips

என்னை கொலை செய்ய கூலிப்படை!. அருண்குமார் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!...

savukku shankar
கடந்த பல வருடங்களாகவே சவுக்கு மீடியா என்கிற ஊடகம் மூலம் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர் சவுக்கு சங்கர். இதனால் பலமுறை இவர் சிறைக்கு சென்றார். குறிப்பாக கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியை இவர் கடுமையாக விமர்சித்தார். முக ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் என தொடர்ந்து கூறி வந்தார்.
 
மேலும் என்ன நடக்கிறது என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை.. அவரிடம் யாரும் சொல்வதும் இல்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டிருக்கிறார்.. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடையும் என சவுக்கு சங்கர் தொடர்ந்து சொல்லி வந்தார்.  திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ததாலும் திமுகவின் பல ஊழல்களை அவர் வெளிக்கொணர்ந்ததாலும் கடந்த திமுக ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார் சவுக்கு சங்கர். அதற்கு பின்னணியில் திமுகவின் ஆதரவாளராக பார்க்கப்பட்ட அருண்குமார் ஐபிஎஸ் இருந்ததாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.
 
அருண்குமார் ஐபிஎஸ் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சவுக்கு சங்கரின் தயார் மரணமடைந்தர். தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட குண்டாஸ் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. எனவே, சவுக்கு சங்கர் விடுதலையானார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் என்னை கொலை செய்ய மும்பையை சேர்ந்த ஒரு கூலிப்படையை அருண் ஐபிஎஸ் நியமித்திருக்கிறார். எனக்கு டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் இதை கூறினார்கள். எனவே, சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன்..
 
அருண் ஐபிஎஸ் இதையெல்லாம் செய்வாரா என்று நீங்கள் சந்தேகப்படுவீர்கள். கடந்த திமுக ஆட்சியின்போது என்னை கொலை செய்ய தென் மாவட்டத்திலிருந்து கூலிப்படையை நியமித்தார். ஆனால் நான் அப்போது டிஜிபியை சந்தித்து இது தொடர்பாக புகார் சொன்னதால் அது நடக்கவில்லை. தற்போது அருண் ஐ.பி.எஸ் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்தாலும் என்னை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் இருக்கிறார்’ என சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்
4 வருடம் ரகசிய காதல்!.. மாமியாரை திருமணம் செய்த மருமகன்!.. வெளியான வீடியோ