1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac bar tender to be over in this month

ஜூன் 30ம் தேதிக்குள் முடியும் டெண்டர்!... டாஸ்மாக் அதிகாரிகள் இட மாற்றம்!..

tasmac
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சரான உடனேயே பல அதிரடியான அறிவிப்புகள் வெளியானது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் தொடர்பான அறிவிப்புகள்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இரவு 10 மணிக்குள் கடையை மூடி விட வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்கக் கூடாது. MPR விலைக்கு மேல் பத்து ரூபாய் வசூலிக்க கூடாது என்றெல்லாம் பல உத்தரவுகள் பறந்தன. ஆனால், 10 ரூபாய் சேர்த்து வாங்கக்கூடாது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போனது.

இதனால், மதுப் பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் கோபமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் அமைச்சர் தலையிட்டு சமரசம் செய்தார்.

இந்நிலையில்தான், டாஸ்மாக் பார் தொடர்பான டெண்டர் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நடைமுறைகளை சீரமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. டாஸ்மாக்கின் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. உரிய நெறிமுறைகளுடன் புதிய டெண்டர்கள் ஒதுக்கவும், பாட்டில் திரும்ப பெரும் திட்டத்தை மறுசீரப்பு செய்யவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா.. இந்த முறை திமுக ஆதரவு தருமா?