தொடர்புடைய செய்திகள்
- வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..
- நாளை திருச்சியில் முதல்வர்!.. என்னப் பேசப்போகிறார் விஜய்?..
- பாரில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கார் ஏற்றிக் கொலை!.. சென்னையில் அதிர்ச்சி..
- கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...
- மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..
24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் செவிலியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்க வர வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கடந்த பல வருடங்களாகவே அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது. இது தொடர்பான பல வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது. அரசு மருத்துவமனையின் துறை மற்றும் புற நோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும். உள்நோயாளிகள் பிரிவை கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் இருக்க வேண்டும்..
மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். மருத்துவ அதிகாரியான RMO காலை 7 மணி முதல் மருத்துவமனை செயல்பாடுகளை சரியாக கண்காணிக்க வேண்டும்
. மருத்துவம் தொடர்பான படிப்பு அல்லது செவிலியர் பயிற்சி பெறாத தூய்மை பணியாளர்களை எக்காரணத்தை கொண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ, ஊசி போடவோ அனுமதிக்க கூடாது. நோயாளிகள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
