1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police security is increased to tvk vijay

துப்பாக்கி ஏந்தி 50 காவலர்கள்.. 10 ஜீப்பில் பின் தொடர.. விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிப்பு!...

vijay
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இவர் துவங்கிய தமிழர் வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

எனவே, விஜய் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் அவர் மற்ற அரசியல் தலைவர் போல தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை.. ஒருநாள் பிரச்சாரத்தை சென்றால் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கிறார்.. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விஜய் சில தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்து முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஒருபக்கம் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை விஜய் சென்னையில் பிரச்சாரம் செய்வதற்கு முன் அதிகப்படியான ரசிகர்கள் அவர் வீட்டில் முன்பு சூழ்ந்து விட்டனர். இதையடுத்தே தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது..

கடந்த முறை பாதுகாப்பில் குறைபாடு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது இரண்டு உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் துப்பாக்கி ஏந்தி 10 ஜீப்புகளில் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
டெல்லி ஆட்டோக்களில் டொனால்ட் ட்ரம்ப் படங்கள்: இணையத்தில் வெடித்த விவாதம்!