1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk vijay compaign in tripur perumanallur

பழைய ஓய்வூதியம்!.. போலீஸுக்கு 25 ஆயிரம் சம்பளம்!.. திருப்பூரில் விஜய் வாக்குறுதி..

vijay
தவெக தலைவர் விஜய் இன்று கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய் அங்கிருந்து திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருருக்கிறார். இந்நிலையில் திருப்பூர் பெருமாநல்லூரில் பொதுமக்களுக்கு முன் அவர் பிரச்சாரம் செய்தபோது பல வாக்குறுதிகளை அளித்தார்.

நெசவாளர்களுக்கு அரசு சார்பில் 10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

அனைத்து நெசவாளர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் 3000 ஆக உயர்த்தப்படும்..

இந்தியாவிலேயே அதிக எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மூடப்பட்டதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதுதான் திமுக அரசின் சாதனை..

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்காக மின்க ட்டணத்தில் பீக் ஹவர்ஸ் கட்டணம் நிறுத்தி வைக்கப்படும்..

நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு 3500ம். கரும்புக்கு டன் ஒன்று 4,500ம் வழங்கப்படும்...

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்..

5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலிக்கும்..

பதவி உயர்வுக்கு பணம் பெரும் கலாச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முடிவுக்கு கொண்டு வரும்..

ஐந்தாண்டுகள் அரசு பணியை நிறைவு செய்த தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்..

காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும்..

அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு சுழற்சிமுறை விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும். பெண் காவலர்களுக்கு தனி ஓய்வறை மற்றும் நடமாடும் கழிப்பறை அமைக்கப்படும்..

நெசவாளர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய அரசு சார்பில் இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்..

என்னை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம்.. நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன்.. பொய் வாக்குறுதி கொடுத்து நான் உங்களை ஏமாற்றமாட்டேன்’ என விஜய் பிரச்சாரம் செய்தார்.

அடுத்த கட்டுரையில்
விஜயை பாக்க போய் 5 பவுன் செயின் போச்சே!.. கதறி அழுத பெண்!.. கோவையில் பரபரப்பு!...