தவெக எவ்ளோ நாள்னு பார்ப்போம்!.. கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் ஜேடிசி பிரபாகரிடம் கடிதம் கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதிகொடுக்கவில்லை.
இதற்குக் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது தவெக அரசு எதற்கும் அனுமதி கொடுப்பதில்லை. திமுக கூட இதில் சரியாக நடந்துகொண்டது. ஆனால், தவெக எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை. ரீல்ஸ் போட்டு ரீல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் போடுவதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கிறது என்று கூறினார்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்பிருந்த அதிமுக இப்போது இல்லை. தற்போதுள்ள அதிமுக அதிமுகவே இல்லை என கூறியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு ஏதோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த கட்சி இருக்கிறதா என்பதை சிறிது நாட்கள் கழித்து பார்க்கலாம். கட்சி துவங்கி 3 வருடங்கள்தானே ஆகிறது. பார்க்கலாம். எந்த அளவிற்கு இந்த கட்சி வேகமாக ஆட்சிக்கு வந்ததோ, அதே அளவிற்கு இந்த கட்சி படுபாதாளத்திற்கு சென்றுவிடும் என பேசினார்.