1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. polls says tvk vijay will win in trichy east

பெரம்பூர் தொகுதியில் விஜய் மாபெரும் வெற்றி!.. கருத்துக்கணிப்பில் தகவல்!...

vijay
சினிமா நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகரம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. தனித்துப் போட்டியிடும் தவெக் 34 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நியமித்திருக்கிறது. விஜயை பொறுத்தவரை அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக தவெக தரப்பில் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது..

ஒருபக்கம் மற்ற அரசியல் தலைவர்கள் போல விஜய் தொடர்ந்து பிரச்சாரத்திற்கு செல்வதில்லை. ஒருநாள் பிரச்சாரத்திற்கு சென்றால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஓய்வெடுக்கிறார்.. அதன் பின்னரே அவர் மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்கிறார். பல தேர்தல் பிரச்சாரங்களையும் அவர் ரத்து செய்துவிடுகிறார்.

வருகிற 21ம் தேதி பிரச்சாரம் முடியும் நிலையில் அவர் தமிழகத்தின் சில தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என சில கருத்துக்கணிப்புகள் சொல்வதாக தவெக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

அதேநேரம் திருச்சி கிழக்கு தொகுதி பற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. திருச்சி என்பது கடந்த பல வருடங்களாகவே திமுகவின் கோட்டையாக இருக்கிறது.. ஏனெனில் அங்கு திமுகவின் முக்கிய அமைச்சரான கே.என் நேரு இருக்கிறார். எனவே, திருச்சியில் விஜய் வெற்றி பெறுவாரா என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்..


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பூரில் பிரச்சாரம்!.. விஜயை பார்க்க வந்த 10 பேர் மயக்கம்!..