1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. women lost her five pawn cold in covai

விஜயை பாக்க போய் 5 பவுன் செயின் போச்சே!.. கதறி அழுத பெண்!.. கோவையில் பரபரப்பு!...

women
தவெக தலைவர் விஜய் கோவையில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றிருக்கிறார். இன்று காலை தனி விமானம் மூலம் கோவை சென்ற விஜய் அங்கு பிரச்சார வேனிலிருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார்.

வழக்கம்போல் அவர் கோவையில் பிரச்சாரத்திற்காக சென்றபோது அவரைக் காண பல ஆயிரம் மக்கள் சாலைகளில் கூடிவிட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. பல இளைஞர்களும் பெண்களும் அவரை பார்ப்பதற்காக குவிந்துவிட்டனர்.

கோவை வந்த விஜய் அவிநாசி சாலையில் ரோட் ஷோ நடத்தினார்.. அப்போது கணியன் சுங்கச்சாவடி அருகே ஆயிரக்கணக்கான பேர் கூடி விட்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
vijay

இந்நிலையில், கோவை கணியூரில் விஜயை பார்ப்பதற்காக வந்த ஒரு பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிபோய்விட்டது. இதனால் அந்த பெண் கதறி அழுதார்.. அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் இது பற்றி அவர் சொல்லவே அந்த பெண்ணை கருத்தப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினார்கள்.

அந்தப் பெண் கதறி அழுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகும் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது..
அடுத்த கட்டுரையில்
திமுகவுக்கு ஓட்டுபோட்டாதான் ரூ.8 ஆயிரம் டோக்கன்!.. ஆதரத்தை வெளியிட்ட இயக்குனர்..