1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Donald Trump Posters on Delhi Autos for US Independence Anniversary Spark Online Backlash

டெல்லி ஆட்டோக்களில் டொனால்ட் ட்ரம்ப் படங்கள்: இணையத்தில் வெடித்த விவாதம்!

டெல்லி ஆட்டோ
டெல்லியில் ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் சிலவற்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 
 
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவை விட எதிர்ப்புகளே அதிகம் கிளம்பியுள்ளன. இந்திய பொது போக்குவரத்து வாகனங்களை ஒரு வெளிநாட்டு அரசியல் தலைவரை விளம்பரப்படுத்த பயன்படுத்துவது முறையற்றது என பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
மேலும் சிலர், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் மோதல்களை சுட்டிக்காட்டி, போர் சூழலை தணிக்க முயலாமல் இத்தகைய பிம்ப அரசியலில் ஈடுபடுவதை கிண்டல் செய்துள்ளனர். "இந்தியா மெல்ல மெல்ல அமெரிக்காவின் காலனியாக மாறி வருகிறதா?" என்ற கிண்டலான கேள்விகளும் எழுந்துள்ளன. 
 
ஏற்கனவே டெல்லி ஆட்டோக்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கும், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அலங்கரிக்கப்பட்டிருப்பது தூதரக ரீதியான சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
துப்பாக்கி ஏந்தி 50 காவலர்கள்.. 10 ஜீப்பில் பின் தொடர.. விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிப்பு!...