காரைக்குடியில் நாளை விஜய் பிரச்சாரம்!.. மரங்களுக்கு Z+ பாதுகாப்பு!. இது புதுசா இருக்கு!...
தலைவர் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.. விஜய் எங்கு சென்றாலும் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் கூடி விடுகிறார்கள்.. இதனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
அதேநேரம் கரூருக்கு விஜய் சென்றபோது பல ஆயிரம் பேர் கூடியதால் அசம்பாவிதம் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த பின் விஜய் எங்கு சென்றாலும் போலீசார் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் பல ஊர்களுக்கும் சென்ற பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கூட திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போதும் ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர்.. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருபக்கம் விஜய் சாலையில் வரும்போது அவரை பார்ப்பதற்காக மரங்கள் மற்றும் மின் பிளாட்பார்ம் ஆகியவற்றின் மீது ஏறி கூட அவரின் ரசிகர்கள் நிற்கிறார்கள். இது பார்ப்பவர்களுக்கு ஆபத்தாக இருந்தாலும் அவர்கள் அதற்கெல்லாம் பயப்படுவதில்லை
. விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் உள்ள மரங்களுக்கு போலீசார் தடுப்பு போட்டு மூடியிருக்கிறார்கள்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை திமுக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜய் வருவதால் மரங்களுக்கு Z+ பாதுகாப்பு என நக்கலடித்து வருகிறார்கள்.
Video Courtesy to Dinakaran

— Taxi (@KrrTaxi) April 9, 2026