பிரச்சாரம் ரத்து!. இப்படியே போனா பாதி இடத்துல கூட விஜய் பிரச்சாரம் பண்ணமாட்டார்!...
தவெக தலைவர் விஜய் எப்போது கரூருக்கு சென்று அங்கு அசம்பாவிதம் ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்களோ அப்போது முதலில் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதோடு, விஜயின் ரோட் ஷோவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இத்தனை பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.. இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்க வேண்டும் என போலீசார் பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார்கள்.. ஆனால் விஜயை பார்க்க மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் தவெகவினரால் விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை. எனவே அதே காரணம் காட்டி விஜயின் மற்ற கூட்டங்களுக்கு போலீசார்கள் அனுமதியை கொடுக்காமல் இழுத்தெடுக்கிறார்கள் அல்லது மறுத்துவிடுகிறார்கள்..
சமீபத்தில் கூட இது புதுச்சேரியில் 20 இடங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் விஜய். ஆனால் நான்கு இடங்களில் மட்டுமே அவருக்கு அனுமதியே கொடுத்தார்கள். அதேபோல் சென்னையில் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு சென்றபோது அங்கே அவரது பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. அதோடு அங்கு அதிக அளவு மக்கள் கூடியதால் விஜயின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..
எனவே விஜயே சில தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், ஏப்ரல் 6ம் தேதியான இன்று விஜய் சென்னை வில்லிவாக்கம், தி.நகர், அண்ணா நகர், விருகம்பாக்கம் அதிக தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. எனவே, காவல்துறை அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி விஜயின் பிரச்சாரத்தை தவெக ரத்து செய்துவிட்டது. இப்படியே பிரச்சாரங்களை ரத்து செய்து கொண்டே போனால் விஜய் பல தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது..