1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. shelvi damodharan talk about tvk vijay

விஜய் வெளியே வந்தால் துர்மரணம் நிகழும்!.. பிரபல ஜோதிகர் பகீர் பேட்டி!....

vijay
நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். கரூருக்கு மக்களை சந்திப்பதற்காக அவர் சென்ற போது அவரை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 41 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கரும்புள்ளியாக அமைந்தது..

இதிலிருந்து விஜய் மீளவே இரண்டு மாதங்கள் ஆனது. அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விஜய் ஆறுதல் சொல்லவில்லை என்கிற புகார் அவர் மீது எழுந்தது. அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார் விஜய்..

கரூரில் மட்டுமல்ல.. விஜய் கட்சி துவங்கி தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்தபோதும் 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அதேபோல் தஞ்சாவூரில் விஜயின் வாகனத்திற்கு அருகே பைக்கில் சென்ற ஒரு கல்லூரி மாணவர் கீழே விழுந்து இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். சேலத்தில் விஜய் கலந்துகொண்ட தவெக பொதுக்கூடத்தில் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து சூரஜ் என்கிற வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
damodaran

எனவேதான் விஜய் செல்லும் பொதுக்கூட்டங்களுக்கும், பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ஜோதிடர் ஷெல்வி தாமோதரன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ விஜயின் அரசியல் வருகை ண்டிப்பாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் எல்லா ஊர்களுக்கும் சென்று திறந்த வெளியில் ஒரு மீட்டிங் பேசுவதுதான் மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். விஜய் வாகனம் வெளியே வந்தாலே துர் மரணங்கள் தொடரும்.. அதை தடுக்கவே முடியாது.. அந்த அளவுக்கு விஜயின் ஜாதகம் பவர்ஃபுல்லாக இருக்கிறது’ என்று கூறி பீதியை கிளப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கூட டைப் செய்ய தெரியவில்லை.. கிளர்க்கில் இருந்து பியூனாக பதவி இறக்கம்..!