இன்று திருநெல்வேலி.. நாளை கடலூர்!.. விஜயின் பிரச்சார திட்டம் என்ன?...
தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக திருநெல்வேலி செல்லவிருக்கிறார். அதோடு 51 நிபந்தனைகளுடன் ரோட் ஷோவை நடத்த போலீசார் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். விமானம் மூலம் இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி வருகிறார் விஜய்.. அதன் பின் சாலை மார்க்கமாக அவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிக்கு வருகிறார்..
12 மணிக்கு மேல் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குகள் சேகரிக்கிறார்.
அதன் பின் அங்கிருந்து மீண்டும் அவர் தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அதேபோல் நாளை அவர் கடலூர், வடலூர், சேத்தியாதோப்பு, தொழுதூர் ஆகிய 4 இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக தவெக அனுமதி கேட்டிருந்த நிலையில் 16 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.. முதலில் ஹெலிகாப்டர் மூலம் விஜய் வருவதாக திட்டமிட்ட நிலையில் தற்போது சாலை மார்க்கமாக மாற்றப்பட்டிருக்கிறது..