ஆசையோடு ஓடிவந்த முதியவரை தள்ளிவிட்ட பவுன்சர்!. கடுப்பாகி கத்திய விஜய்!...
தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியிலும் போட்டியிடுவதால் தவெக தலைவர் விஜய் இன்று காலை புதுச்சேரி சென்றார். அங்கு 3 இடங்களில் அவர் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதி, தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதி மற்றும் கடலூர் சாலை மால் அருகிலும் விஜய் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே அந்த பகுதிக்கு விஜய் வருவார் என தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மிகவும் அதிக அளவில் அங்கு கூடியிருந்தனர்.. ஒரு பக்கம் புதுச்சேரியில் நுழைந்தது முதலே விஜயின் வாகனத்திற்கு முன்னும் பின்னும், இரு பக்கத்திலும் விஜயின் ரசிகர்களும் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தார்கள்.. அதில் சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் விஜயின் வாகனத்தின் மீது ஏறி அவருக்கு கை காட்டினார்கள்..
பவுன்சர்கள் அவர்களை கீழே இறக்கி விஜயின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.. விஜயின் வாகனம் ஒரு பக்கம் வரும்போது ஒரு வழி சாலை என தெரிந்தும் பல விஜய் ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றார்கள்.. ஒருபக்கம் சில விஜய் ரசிகர்கள் டூவீலரில் சென்று கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டது.
அதேபோல் விஜயை அருகில் பார்ப்பதற்காக முதியவர் ஒருவர் வேகமாக ஓடி வந்தார்.. ஆனால் அவரை விஜயின் பாதுகாவலர் ஒருவர் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தார்.. இதை பார்த்து கோபப்பட்ட விஜய் அவரிடம் கோபப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
Video Courtesty to BehindTalkies