விஜயை பார்த்து 20 வருசம் ஆச்சி!.. ஏன் கிளப்பிவிடுறீங்க?!. பவன் கல்யாண் மறுப்பு..
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக விஜய் அறிவித்தும் எந்த அரசியல் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க செல்லவில்லை.. காங்கிரஸ் மட்டும் மறைமுகமாக தவெகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தியது.. ஆனால் இறுதியில் திமுக கூட்டணியில் இணைந்து விட்டது..
அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை கொண்டு வர விரும்பிய பாஜக தலைமை ஆந்திர துணை முதல்வர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மூலம் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. அரசியலில் தன்னை பின்பற்றம் படியும், தான் எப்படி என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து எம்எல்ஏக்களை பெற்று துணை முதல்வர் ஆனேனோ அதேபோல நீங்களும் ஆகலாம்.. நீங்கலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுங்கள் என பவன் கல்யாண் விஜயுடன் சொன்னதாக செய்திகள் கசிந்தது.. எனவே, விஜய் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த செய்தியை பவன் கல்யாண் மறுத்திருக்கிறார்.. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன்.. நான் விஜயிடம் பேசவில்லை.. விஜயை பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது.. சமீபத்தில் பேசவும் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார்..