சிபிஐ அலுவலகத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்த விஜய்!.. வைரல் வீடியோ!...
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரைக்காண பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை சென்றுவிட்டார். இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு சென்றது. எனவே, கடந்த சில மாதங்களாகவே சிபிஐ விசாரணை செய்து வந்தது.
ஏற்கனவே தவெக தலைவர் விஜயை இரண்டு முறை டெல்லிக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது. அதோடு, தவெக முக்கிய நிர்வாகிகளான நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சிலரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது. அதன்பின் கடந்த 10ம் தேதி டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகவேண்டுமென சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், தேர்தல் பணிகளை காட்டி விஜய் தரப்பு வேறு தேதி கேட்க, 15ம் தேதி இன்று விஜய் ஆஜராகவேண்டும் என சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, விஜய் நேற்றே தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து வெளியே வரும்போது விஜய் அங்கிருந்த ரசிகர்களுக்கு சிரித்தபடி கைக்காட்டிக்கொண்டே சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.