ஞாயிறு, 12 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2026 (16:08 IST)

அந்த 2 பேர் சொல்வதை மட்டுமே கேட்கிறாரா விஜய்?.. தவெகவில் நடப்பது என்ன?..

vijay
விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. அரசியல் மேடைகளில் சினிமாவில் எப்படி பன்ச் வசனம் பேசுவாரோ அதுபோலவே பேசுகிறார் விஜய். அதேபோல், யரோ எழுதி கொடுப்பதை அப்படியே பேசுகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. அரசியலில் சரியான நேரத்தில் சரியான ஆலோசனை செல்பவர்களை அருகில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால், நடப்பதையெல்லாம் பார்க்கும்போது விஜய்க்கு அப்படி யாருமில்லை என்றே தோன்றுகிறது.

ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்யசாமி ஆகிய இருவரும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் விஜய் கேட்பதாக நிர்வாகிகள் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் வழிகாட்டுதலின்படி விஜய் செய்த சில விஷயங்கள் அவருக்கு தலைவலியை கொடுத்தது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தவர் ஆதவ் அர்ஜுனாதான் என பலரும் சொல்கிறார்கள்.

கரூர் பிரச்சாரத் திட்டத்தை வடிவமைத்தது, விஜயை வேண்டுமென்றே தாமதமாக கரூருக்கு கூட்டி சென்றது, கூட்டம் அதிகமாக இருக்கிறது, இங்கே வரவேண்டாம் என காவல்துறை கூறியும் அதை கேட்காமல் விஜயை கரூருக்கு உள்ளே கூட்டிச்சென்றது எல்லாமே ஆதாவ் அர்ஜுனாதான் என்கிறார்கள். அதனால்தான் அவருக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.

ஒருபக்கம் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை சொல்லும் ஜான் ஆரோக்கியசாமி தற்போது தவெகவுக்கு வேலை பார்த்து வருகிறார்.. உங்களுக்கு 30 சதவீத வாக்குகள் இருக்கிறது.. நீங்கள்தான் அடுத்த முதல்வர்.. நீங்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு செல்ல வேண்டாம்.. அப்படி போனால் பாஜக உங்களை அழித்துவிடும்.. திமுகவுக்கு அடுத்து உங்களுக்குதான் வாக்கு சதவீதம் அதிகம். அதனால்தான் உங்களை அதிமுக -  பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி செய்கிறார்கள்.. அந்த கூட்டணிக்கு நீங்கள் சென்றால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழப்பீர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள்’ என்றெல்லாம் அவர் விஜயிடம் சொல்வதாக சொல்லப்படுகிறது..

அதேபோல் தவெக இதுவரை எந்த கட்சியிலும் கூட்டணி அமைக்காமல் போனதற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம் என சில தவெக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.. விஜயை முதல்வர் ரேஞ்சுக்கு பில்டப் செய்து பேசி கூட்டணி ஏற்படாமல் அவர் தடுத்துவிடுகிறார் என்கிறார்கள்..
அரசியலில் அனுபவம் உள்ள செங்கோட்டையன் போன்றவர்களிடம் தளபதி ஆலோசனை கேட்பது நல்லது என்று குமறுகிறார் தவெக நிர்வாகிகள்..