1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha angery comment against adhav arjuna

அருகதையில்லை!.. ஆதவ் அர்ஜுனா பேசுறத நிறுத்திக்கோங்க!.. பிரேமலதா கோபம்!...

premalatha
நடிகர் விஜயகாந்த் 2005ம் வருடம் தேசிய முற்போக்கு முன்னேற்ற கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்தார். குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்ய ரஜினியும், கமலும் கூட முன்வராத நிலையில் விஜயகாந்த் துணிச்சலாக களமிறங்கினார்.

அதேநேரம், ஒருமுறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எதிர் கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் கடைசிவரை விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைக்கவே இல்லை. ஏனெனில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் விஜயகாந்த். ஏனெனில், கலைஞரின் மீது அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தாலும் அரசியலுக்கு வந்தபின் தன்னிடம் திமுக நடந்துகொண்டது விஜயகாந்துக்கு பிடிக்கவில்லை. விஜயகாந்தின் திருமண மண்டபம் கூட திமுக ஆட்சி காலத்தில்தான் இடிக்கப்பட்டது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணில் இடம் பெற்றது.

சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘விஜயகாந்த் திமுகவை கடுமையாக எதிர்த்தார். ஆனால், பிரேமலதாவோ திமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறார்.. இதை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது’ என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரேமலதா ‘கேப்டன் விஜயகாந்தை நேரில் பார்க்காதவர்கள் அவரது ஆன்மா குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.. கேப்டன் குடும்பத்திற்கும், கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் கேப்டனின் ஆன்மா குறித்து பேசக்கூடாது.. வாய்க்கு வந்ததை பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் மாதிரியே குஜராத்திலும் ஒருவர்.. கட்சி மாறிய முன்னாள் முதல்வர்...