பழனிச்சாமி முதல்வர்.. விஜய் எதிர்கட்சி தலைவர்!. டீல் பேசும் பாஜக?..
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வரும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மூலம் விஜயை சம்மதிக்க வைக்கும் முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியானது..
ஆனால் விஜயின் டிமாண்ட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்கிறார்கள்.. 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெற்றால் விஜய் இரண்டரை வ்ருடங்கள் முதல்வராக இருப்பார் என்றெல்லாம் தவெக டிமாண்ட் வைக்க பழனிச்சாமி அதை நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியை பாஜக விடவில்லை. இந்த தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்கடித்து தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என பாஜக மேலிடம் கருதுகிறது.. எனவே அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளும் இறங்கியிருக்கிறார்கள்..
விஜய் என்.டி.ஏ கூட்டணிக்குள் வந்தால் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறு..ம் திமுக சொற்பமான தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும். எனது நீங்கள் முதல்வராக இருங்கள்.. விஜய் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கட்டும் என்றெல்லாம் பழனிச்சாமியிடம் சொல்லி பாஜக சொல்லி வருவதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லியில் இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.