தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் அனுமதி வாங்க தலைமைக்கு போக வேண்டாம்.. உதவி செயற்பொறியாளர்கள் முதல் கண்காணிப்பு பொறியாளர்கள் வரை அதிகாரம் பகிர்வு..
- திருச்செந்தூர் கோவிலில் உயரதிகாரிகள் முதல் கடைகோடி ஊழியர் வரை மோசடி.. ஒருத்தரையும் விடாதீங்க அமைச்சர் ரமேஷ்...!
- பதவியேற்ற உடனே ஆய்வுக்கூட்டம்.. அறநிலையத்துறையில் இனி அதிரடி மாற்றம்?
- ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ்-க்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு சேகர் பாபு வகித்த பதவி ஒரு இளைஞருக்கு.. இனி ஒவ்வொரு கோவிலிலும் அதிரடி நடக்கும்..
- ஒரே டிக்கெட்டில் 3 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை அறிமுகம்! இனிமேல் கியூலைன் கிடையாது..
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் எளிமையாகவும், நேர்மையாகவும் சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய, இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் தரிசனத்திற்காக விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு பக்தர்களிடம் இடைத்தரகர்கள் அல்லது சிலர் லஞ்சம் வாங்குவதை தடுப்பதே இந்த புதிய நடைமுறையின் முதன்மை நோக்கமாகும். லஞ்ச புகார்களுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு வசதி கொண்டு வரப்படவிருக்கிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், பக்தர்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே தங்களுக்கு தேவையான தேதிகள் மற்றும் நேரத்தை தேர்வு செய்து தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இது கோவில்களில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலை குறைப்பதோடு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
மேலும், கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கவும் இத்தொழில்நுட்ப வசதி பெரிதும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
