தொடர்புடைய செய்திகள்
- மம்தா பானர்ஜி தான் திரிணாமுல் காங்கிரஸ்.. திரிணாமுல் காங்கிரஸ் என்றாலே மம்தா தான்... எம்பி மஹுவா ஆவேசம்
- மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையையே பாஜக முடிச்சிடுச்சு.. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை விஜய் முடிச்சிட்டாரு.. நாடு சுத்தமாகி கொண்டு வருகிறது.. அரசியல் விமர்சகர்கள்
- மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!
- 1.69 கோடி சாதி சான்றிதழ்கள் போலியா? ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க முதல்வர்..!
- சட்டப்பேரவையை கலைத்து ஆளுனர் ஆர்.என்.ரவி உத்தரவு.. பெரும் பரபரப்பு..!
யூசுப் பதானை எம்பி பதவியிலிருந்து விலக கூறினாரா சவுரவ் கங்குலி? மம்தா பானர்ஜி தூண்டுதலா?
மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளின் பேரில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி, எம்பி யூசுப் பதானை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. மம்தா பானர்ஜி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காகவே பகரம்பூர் மக்களவை தொகுதியை காலியாக்க இந்த முயற்சி நடந்ததாக கூறப்பட்டது.
மம்தா பானர்ஜி சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்து, தனது பபானிபூர் கோட்டையையும் இழந்ததால், அவர் மக்களவை மூலம் மீண்டும் அரசியலில் வலுபெற திட்டமிடுவதாக பெங்காலி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்காக கங்குலி மூலம் யூசுப் பதானை அணுகியதாகவும், ஆனால் பதான் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தச் செய்திகள் முற்றிலும் "தவறானவை மற்றும் உண்மையற்றவை" என்று சவுரவ் கங்குலி மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவருமே திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா பானர்ஜி என்னை இதுபோன்ற எந்தவொரு விஷயத்திற்காகவும் அணுகவில்லை. நான் யூசுப் பதானை தொடர்பு கொண்டு எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளே சலசலப்புகள் நிலவி வரும் வேளையில், இந்த மறுப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Edited by Siva
