1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump comment about iran war

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

donald
ஈரான் அனு ஆயுதம் தயாரிக்கக் கூடாது எனக்கூறி அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரினையை ஈரான் மூடிவிட்டது.

இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அந்த நாடுகளின் பொருளாதாரமும் பிரச்சனையை சந்தித்தது.. ஒருபக்கம், ஈரான் தேர்தலில் அமெரிக்கா சில ஆயிரம் கோடிகளை செலவு செய்துவிட்டது.

இந்த நிலையில்தான், சமீபத்தில் நடந்த அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது. இதற்கு ஈரான் மீது போர் தொடுத்ததுதான் முக்கிய காரணம்.. இது அமெரிக்க மக்களுக்கு பிடிக்கவில்லை என ஒத்துக் கொண்டார்..

ஈரான் அமெரிக்க தேர்தலில் டிரம்பின் கட்சி வெற்றி பெற்றிருந்தால் ஈரான் மீது மீண்டும் அவர் போரை தொடங்குவார் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா?’ என செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு பதில் சொன்ன டிரம்ப் ‘ எங்களிடம் போர் திட்டம் இருக்கிறது.. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என பார்ப்போம்.. நான் அப்போது உங்களிடம் இது பற்றி பேசுகிறேன்.. ஈரான் விவகாரத்தில் நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன்.. ஈரான் மீது பொருளாதார தடை மற்றும் அழுத்தம் தொடர்ந்து எடுப்பதால் இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று அவர் கூறினார். தேர்தல் தோல்வி காரணமாக ஈரான் விஷயத்தில் முடிவெடுக்க டிரம்ப் தயங்குவதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு...