ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கன்னியாகுமாரியில் அலங்கார மாதா திருத்தலம் அருகே சோனியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்..
சோனியா தினமும் காலை தனது வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்படியே கடந்த 18ம் தேதியும் அவர் காலை வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் நகை திருடு போயிருந்தது..
இதையடுத்து காவல் நிலையத்தில் சோனியா புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.