லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...
பொதுவாகவே அரசு பேருந்துகளை ஒப்பிடும்போது தனியார் என சொல்லப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம். அதுவும் தீபாவளி, பொங்கல் மற்றும் ஆயுத பூஜை போன்ற தொடர் விடுமுறைகளின் போது அரசு நிர்ணயத்தை விலையை விட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை அவர்கள் வசூலிக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இது தொடர்பாக புகார் எழுந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒரு பக்கம் பேருந்தில் இருக்கும் வசதிகள் காரணமாக ஆம்னி பேருந்தில் பயணிக்க பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில்தான் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்கள்..
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். தவெக ஆட்சி வந்த பிறகு ஆர்டிஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ் அனுமதி பெற லஞ்சம் வாங்கவில்லை.. எனவே, முதலில் 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயாராக இருக்கிறோம்
. லஞ்சம் இல்லாததால் அரசு கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்
விழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வதாக குற்றச்சாட்டு இருக்கிறது.. இடைத்தரகர்கள் மட்டும் பணம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்..
அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன் வந்திருப்பது பொதுமக்ளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.