அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 முதல் 21ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் தென்மேற்கு பருவமழை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் எனவும் கூறப்பட்டிருந்தது..
இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தாழ்வு பகுதி உருவாக சாதக நிலை இல்லை எனவும் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்று சுழற்சியால் அடுத்து 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் எனவும் இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது..

