லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி.. தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை..
தென் தமிழகம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'முரசு' தீவிர புயல் தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகே கரையைக் கடந்து வலுவிழந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து, நவம்பர் 5 அன்று மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், நவம்பர் 6 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வரும் நவம்பர் 8 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

