1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmal kumar saya ritheesh runs the dmk government

உதயநிதிக்கு நெருக்கம்!.. திமுக அரசை நடத்தியதே ரத்தீஷ்தான்!.. அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி....

ratheesh
கடந்த திங்கட்கிழமை சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் கடந்த கால திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றி பேசினார். அதிலும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரின் மருமகன் முரசொலி மாறன் மீது சொல்லப்பட்ட ஊழல், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல் ஆகியவற்றை பற்றி முதல்வர் பேசியிருந்தார்.

அப்போது உதயநிதிக்கு நெருக்கமாக இருந்த ரத்தீஷ் என்கிற நபர்தான் டாஸ்மாக் முழு நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தியிருக்கிறார். தவெக ஆட்சிக்கு வந்ததும் அவர் துபாயில் போய் பதுங்கி விட்டார் என்று விஜய் பேசியிருந்தார். இதையடுத்து யார் அந்த ரத்தீஷ் என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் ரத்தீஷ் டாஸ்மாக்கில் நிழல் எம்.டி-யாகவே செயல்பட்டிருக்கிறார் என அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. பார் தொடர்பான டெண்டர்கள், எந்த நிறுவனத்திடம் எந்த மதுபானத்தை வாங்குவது உள்ளிட்ட எல்லாவற்றையும் அவரே முடிவு செய்திருக்கிறார்’ என அமலாக்கத்துறை கூறியிருக்கிறது..

ratheesh

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி நிர்மல் குமார் ‘திமுக செய்த ஊழல்களை அம்பலடுத்தவேண்டும்.. காவிரி முதல் கச்சத்தீவு விவகாரம் வரை தவறுகள் நடந்துள்ளன ..திமுக சீர்குலைத்த அரசு குறைகளை சரி செய்து வருகிறோம். திமுக ஆட்சியில் ரத்திஷ் போன்றவர்கள்தான் அரசை நடத்தியுள்ளனர்..

உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த ரத்தீஷ் தலைமறைவாக இருப்பது ஏன்?.. திமுக அரசாங்கத்தை நடத்தியதை ரத்தீஸ்தான்.. அதனால்தான் முதல்வர் அவரின் பெயரை குறிப்பிட்டார்.. ரத்தீஷ் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து ஆட்சியை நடத்தியுள்ளார்.. 24 மணி நேரமும் குறிஞ்சி இல்லத்தில் உதயநிதியுடன் இருந்தவர்தான் இந்த ரத்தீஷ்’ என அவர் கூறியிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
170 மணி நேரம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர்!.. ஹைலைட்ஸ்!..