1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm joseph vijay helped dmk mla in assembly

சட்டசபையில் தர்ணா!.. திமுக எம்.எல்.ஏவுக்கு கை கொடுத்து தூக்கிவிட்ட விஜய்!.. அட அவரா?!..

vijay
இன்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், வீராணம் ஏரி கட்டுவதில் ஊழல், டாஸ்மாக் ஊழல்,  செந்தில் பாலாஜி. கரூர் கேங், மிசா என பலவற்றை பற்றியும் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார.

கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது கட்சி நிதி என்கிற பெயரில் பணம் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் சென்றிருக்கிறது என அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் சட்டசபையில் கூறினார். இதையடுத்து அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் எனவும் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனார்..

ஆனால் அந்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. எனவே சபாநாயகரின் இருக்கைக்கு முன் கீழே அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு எதிரே நின்றிருந்த திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கீழே அமர்ந்து தர்ணா செய்தார். அதன்பின் எழ முயன்றபோது தடுமாறினார். அப்போது முதல்வர் விஜய் அவரின் கையை பிடித்து அவரை மேலே தூக்கி விட்டார். மேலும், தர்ணா நடத்துவதற்கு உதவி செய்யும்படி தனது டேபிளை கொஞ்சம் பின்னாள் தள்ளினார் விஜய்.

இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ அமளி பண்ணவும். தடுமாறிய திமுக எம்.எல்.ஏ.வுக்கு விஜயே உதவி செய்கிறார்.. என்னா மனுஷன்!.. என தவெக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த துரை சந்திரசேகரன்தான் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் பற்றி சில முகபாவனைகளை செய்து காட்டியவர்.. அதேபோல் அமைச்சர் கீர்த்தனாவை மிகவும் மரியாதைக்குறைவாக பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் குறிப்பிட்ட விஞ்ஞான ஊழல்.. என்ன சொன்னார் தெரியுமா?