கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர் விஜய்!.. உதயநிதி ஸ்டாலின் தாக்கு...
இன்று சட்டசபையில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது அமலாகக்துறை சொன்ன குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து ஆவேசமாக பேசினார்.. சர்க்காரியா கமிஷன் முதல் டாஸ்மாக் ஊழல் வரை, கரூர் பேங்க்.. செந்தில் பாலாஜி என பல விஷயங்களையும் அவர் பேசினார்.. குறிப்பாக திமுகவில் கட்சி நிதி என்கிற பெயரில் பெரும் தொகை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் சென்றதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறது என அவர் கூறியிருந்தார்..
திமுக இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்.. ஊழல் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கே எல்லாம் திமுக இருக்கும்.. ஊழலை மிகவும் நேர்த்தியாக செய்வது திமுக.. பெண்களை மிகவும் இழிவாக பேசுகிறார்கள்.. ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என பேசுகிறார்கள் என்றெல்லாம் அனல் பறக்க விஜய் பேசினார்.. அப்போது அவரின் புகார்களுக்கு பதிலளிக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாய்ப்பு கேட்டார்.. ஆனால், சபாநாயகர் கொடுக்கவில்லை.. எனவே உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்..
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய உதயநிதி நான் கடந்த 3ம் தேதி தமிழக முதலமைச்சரிடம் நேரடியாக 15 கேள்விகளை முன் வைத்தேன். மூன்று நாட்கள் நேரம் எடுத்து நன்றாக ப்ரிப்பேர் பண்ணி நன்றாக வந்து பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்த்தேன்.. ஆனால் ஒரு கேள்விகு கூட பதில் சொல்லாமல் வழக்கம்போல் திமுக மீது பழி போட தொடங்கினார். அமலாக்கதுறையில் இருப்பது வெறும் குற்றச்சாட்டுக்கள் மட்டும்தான்.. அது நிரூபிக்கப்படவில்லை..
திமுக பெண்களை இழிவாக பேசுகிறது என்கிறார். டபுள் மீனிங்கில் பேசுகிறார்கள் என்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது/ இவர் நடித்த படங்களில் எப்படியெல்லாம் வசனங்கள் பேசினார் என்பது மக்களுக்கு தெரியும். மிசாவை பற்றி பேசுகிறார்.. மிசாவை பற்றி பேசுவது இவருக்கு என்ன அருகதை இருக்கிறது? அதுபற்றி இவருக்கு என்ன தெரியும்?.. இவருடைய படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காக கொடநாட்டுக்கு போய் வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இவர் என்று உதயநிதி பேசினார்.