1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi comment about cm vijay talk in assembly

பிரிண்ட் எடுத்து படிக்க எதுக்கு 3 நாள்?.. டம்மி சி.எம்!.. விஜயை விளாசிய உதயநிதி...

udhyanidhi vijay
கடந்த 3ம் தேதி தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி 15 கேள்விகளை எழுப்பி அதற்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதில் சொல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் திமுக மீது அடுக்கடுக்கான பல புகார்களை கூறினார்..

சர்க்காரியா கமிஷன், டாஸ்மாக் ஊழல், செந்தில் பாலாஜி, கரூர் குரூப் என பல விஷயங்கள் பற்றியும் முதல்வர் விஜய் பேசப்பேச திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்து எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். அதோடு முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டார்.. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை.. இதையடுத்து உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்..

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய  உதயநிதி ‘நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை.. வழக்கம் போல் சினிமாவில் பேசுவது போல பன்ச் வசனம் பேசுகிறார்.. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அமலாக்கத்துறை அறிக்கையில்இருப்பதை படித்துக் காட்டுகிறார்.. அவை குற்றச்சாட்டுகள்தானே தவிர நிருபிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்..

மேலும், தனது எக்ஸ் தளத்தில் ‘அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better’ என பதிவிட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
IUML எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து மிரட்டியது யார்?.. அமைச்சர் ஷாஜகான் பகீர்!...