1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. high lights of tn assembly session latest 170 hours

170 மணி நேரம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடர்!.. ஹைலைட்ஸ்!..

udhyanidhi vijay
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 28 நாட்களுக்கும் முன்பு தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த சட்டசபை கூட்டத் தொடரில் ஆளும் கட்சியான தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன், டாஸ்மாக் ஊழல், மிசா காலத்தில் நடந்தது பற்றியெல்லாம் பேசினார். அதற்கு திமுக கடும் எதிர்ப்பு காட்டியது.

இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை திமுக உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். நேற்று அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்
. சட்டப்பேரவையில் 8 தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவையில் மொத்தம் 14 ஆயிரத்து 399 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதிக கேள்விகளுக்கு அமைச்சர் அதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார். மாநில கோரிக்கைகள் மீது 165 எம்.எல்.ஏக்கள் உரையாற்றினார்கள். திமுக எம்எல்ஏக்கள் 23.35 மணி நேரமும், தவெக எம்.எல்.ஏக்கள் 13.28 மணி நேரமும், அதிமுக எம்.எல்.ஏக்கள் 12.58 மணி நேரமும் சட்டசபையில் பேசியிருக்கிறார்கள்.

மொத்தமாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 170 மணி நேரம் நடந்தது. அடுத்த சட்டப் பேரவை கூட்டத்துடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை சரியாக 5.55 மணிக்கு சட்டசபை நிறைவடைந்தது. ஏஞ்சல் நம்பர் கோட்பாடுகளின் படி 555 என்ற எண் வாழ்க்கையில் வரவிருக்கும் நேர்மறையான மாற்றங்கள், வழிகாட்டுதல் மற்றும் தேவதையின் ஆசியை குறிக்கும் எண்ணமாக கருதப்படுகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,000 வரை குறைந்துவிட்டதா? எப்படி வாங்குவது?