1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinamalar and Kalaikkathir Publish News Against Me: Edappadi Palaniswami

தினமலர் உள்பட சில பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி வருகிறது.. எடப்பாடி பழனிசாமி பேட்டி..

எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தினமலர் மற்றும் காலைக்கதிர் நாளிதழ்கள் தனக்கு எதிராகவே தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 
 
2017-ஆம் ஆண்டில் தான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே தன்னை விமர்சித்து செய்தி வெளியிட்டு வருவதாகவும், தன்னைப்பற்றி என்ன எழுதினாலும் தனக்குக்கவலை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிளை கழகத்தில் இருந்து உழைத்து மேலே வந்தவன் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்களிடம் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பதாக எழுப்பிய கேள்விக்கு கோபமடைந்த அவர், "இப்படி குண்டை தூக்கிப் போடாதீர்கள், நாங்கள் ஒன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?" என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். 
 
அதிமுகவில் யாருக்கும் அந்த எண்ணம் கிடையாது என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தியின் போராட்டம்.. சொந்த கட்சியை விட அடுத்த கட்சிகளின் ஆதரவு அதிகமா?