1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy talk about cm vijay

நிர்மல்குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் விஜய்க்கு ஆப்படிப்பாங்க!.. பழனிச்சாமி பேட்டி...

eps palanisamy
எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்புக்கு வந்த பின் அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் என எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றியை பெறவில்லை.

எனவே அதிமுக எம்.எல்.ஏக்களிடையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சி.வி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் அடுத்து என்ன செய்வது என ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அனேகமாக கணிசமானோர் தவெகவுகு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக அலுவலகமே பூட்டப்பட்டது. 72 நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்த விஜய் இப்போது வீர வசனம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.. முதல்வர் விஜய் அவர்களே!.. உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போவது ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல்குமாரும்தான்.. அதனால் எச்சரிக்கையாக இருங்கள்’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
AI கத்துக்கிட்டா வாரத்துல 3 நாள்தான் வேலை!.. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கருத்து...