1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cv shanmugam velumani discuss about by election

சி.வி சண்முகம், வீரமணி, தங்கமணி ஆலோசனை!. பழனிச்சாமிக்கு ஆப்பா?..

sp velumani
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு போனது.

இதனால் அந்த கட்சியை எதிர் கட்சியாக கூட அமர முடியவில்லை. இது சிவி சண்முகம், வேலுமணி, தங்கமணி போன்றவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தவே செய்தியாளர்களை அழைத்து தாங்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர். மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதோடு அவர்களில் 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்..

அவர்களில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய இருவரும் இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டனர். இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்நிலையில்தான் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத்தில் சி.வி சண்முகம் தங்கமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நேற்று சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அனேகமாக அதிமுக தலைமையிலிருந்து பழனிச்சாமியை நீக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்.நினோவின் கோர தாண்டவம்!.. வரலாறு காணாத வெப்பம் பதிவு!..