1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Launches Mega Initiative to Restore 2,300+ Temple Tanks Through CSR and Private Partnerships

1,634 கோயில்களில் 2,372 குளங்களை சீரமைக்க அரசு திட்டம்.. மீண்டும் தெப்பத்திருவிழாக்கள் நடக்குமா?

தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பாரம்பரியத்தையும் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஒரு பிரம்மாண்டமான சீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,634 கோயில்களில் மொத்தம் 2,372 குளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் 282 குளங்கள் முழுமையாகவும், 450 குளங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தத் குளங்களை முழுமையாக மீட்டெடுக்கச் சுமார் 287 கோடி ரூபாய் தேவைப்படுவதால், கோயில்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நிதிகள், தனியார் நிறுவனங்கள், என்.ஜி.ஓ-க்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பங்களிப்போடு சீரமைக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
இந்த திட்டத்தின் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு மேம்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, நின்றுபோன தெப்பத்திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மீண்டும் களைகட்டும். 
 
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சுற்றுலா மேம்பட்டு கோயில் வருமானமும் பெருகும். அரசின் நிதிச்சுமை இல்லாமல் தனியார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், தமிழகத்தின் நீர் மேலாண்மையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் விலகல்.. 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு...