1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE Class 10 Re-Evaluation and Marks Verification Link Active, Check Details Here

சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் லிங்க் வெளியீடு..

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஆன்லைன் இணைப்பை தன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு தங்களது விடைத்தாள்களின் நகலினை பார்வையிட்டு சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சரிபார்ப்புக்கு ரூ.300 கட்டணமாகவும், மறுமதிப்பீட்டுக்கு ரூ.100 கட்டணமாகவும் செலுத்த வேண்டும். 
 
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbses.gov.in மூலமாத் தங்களது ரோல் நம்பர் மற்றும் விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கு பிறகு மதிப்பெண்கள் அதிகரிக்கலாம், குறையலாம் அல்லது மாறாமல் இருக்கலாம்; இறுதி முடிவு இறுதியானது மற்றும் மாற்றத்திற்குட்பட்டது அல்ல.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் தங்கக்குவியல்.. 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்..